பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில்-2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
இதில், பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை 66கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்னை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கெலிஃப் தங்கப்பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னதாக, 2வது சுற்றின்போது, இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி இமானே கெலிப்பின் குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 வினாடிகளில் அழுதபடி போட்டியில் இருந்து வெளியேறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, கெலிஃபுக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாகவும்,எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டன.
இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காத இமானே தங்கம் வென்ற பின், தன் பாலினம் பற்றிப் பேசியிருந்தார்,.அதில், பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் அவர் புகாரளித்துள்ளார்.
இமானேவின் வழக்கறிஞர் கூறியதாவது: இமானே மீது இனவெறியுடன் பாலின ரீதியாக அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான் தங்கள் நோக்கம் என்று கூறியிருந்தார்.
இமானே கெலிஃபின் பாலினம் பற்றி கருத்துப் பதிவிட்டவர்களில் உலலகப் பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் தள ஓனருமான எலான் மஸ்க், அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரிலே கெய்ஸ் எழுத்தாளர் ஜே.கே. ரெளலிங் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ட் ஆகியோர் பெயர்களும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகின்றன.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

