தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது தி கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கிய அவர் விரைவில் முழு நேர அரசியலில் களமிறங்கவுள்ளார்.
இந்த நிலையில் விரைவில் இக்கட்சி சார்பில் மாநாடு நடக்கவுள்ளது.
இந்த நிலையில், விஜய் பயன்படுத்தும் சொகுசு கார்களை பற்றி பார்க்கலாம்.
விஜய் 90 காலக்கட்டத்தில் நடிக்க வந்தபோது டாட்டா எஸ்கேட் கரை பயன்படுத்தினார். அதன்பின்னர், சியரா கார் பயன்படுத்தினார்.
தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அவர், பிரபல ஃபாரின் நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தி வருகிறார்.
அதன்படி, 45 ரூபாய்மதிப்பிலான மினி கூப்பர் கார்,80 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபள்யூ எக்ஸ் 6, ஆடி ஏ8, டொயோட்டாவின் இன்னொவா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பென்ஸ் கார் உள்ளிட்ட கார்கள் இருப்பதாக தகவல் வெளியாகிறது.

