பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் விரைவில் இடைக்கால அரசு நியமிக்கப்படவுள்ளது.
வங்கதேசத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுபணியிடங்களில் 305 இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அந்த நாட்டு மாணவர் அமைப்புகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தின.
இப்போராட்டம் கலவரமாக மாறியது. பிரதம்ர் ஷேக் ஹசீனா உத்தவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் அதிகமானோரை வங்கதேச காவல்துறை கொன்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 30 % இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக குறைக்க வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பினால் மாணவர்கள் அமைதியடைந்தாலு, பிரதமர் ஷேக் ஹசீனாவின் சர்வாதிகாரப் போக்கை எதிர்ப்பு கூறி, அவர் பதவி விலக வேண்டும்; உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கைகள் முனை வைத்தனர்.
சமீபத்தில் மீண்டும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது , போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவரும், வங்,கதேச சுதந்திர போராட்டத்தின் தலைவரான ஷேக் புஜிபுர் ரஹ்மானின் மகளுமான ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்தார். விரைவில் அவர் லண்டன் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை இவ்விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், மாணவர் போரட்டம் சற்றுக் குறைந்துள்ளது. ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும், கலவரம் ஓயவில்லை.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால் அரசுக்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SinojKiyan

