Last updated on May 22nd, 2024 at 09:41 am

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டுகள் நடந்து வரும் இத்தொடரில் ஒவ்வொரு
அணி நிர்வாகத்தாலும், வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு, வெளிநாட்டு வீரர்களும், இந்திய வீரர்களும் கலந்து இத்தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயிண்ட், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎல் 17 வது சீசன் கோடை காலத்தில் தொடங்கிய நிலையில், போட்டிகள் விருவிறுப்பாக நடந்து வருகிறது.இம்முறை 10 அணிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், தொடரின் லீக் போட்டிகளில் அனைத்து அணிகளும் தங்களின் திறமையைக் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை விளையாடிய அணிகளின் பட்டியலில்,
1) கொல்கத்தா அணி மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தொல்வி அடைந்துள்ளது.
1 போட்டியில் முடிவு தெரியவில்லை. அதேபோல் நெட் ரன் ரேட் 1.428 பெற்று, 19 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
2) ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோற்றுள்ளது. நெட் ரன்ரேட் 0.273 பெற்று, 16 புள்ளிகளுடன் 2 வது இடம் பிடித்துள்ளது.
3) சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி, இதுவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை.
எனவே நெட் ரன் ரேட் 0.406 பெற்றும், 15 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது.
4)ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்தது. நெட் ரன் ரேட் 0.528 பெற்று, 14 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது.
5) டெல்லி அணி மொத்தம் 14 மேட்சுகளில் விளையாடி, அதில், 7ல் வெற்றியும், 7 ல் தோல்வியும் அடைந்துள்ளது, நெட் ரன் ரேட் 0.377 பெற்று, 14 புள்ளிகளும் 5 வது இடத்திலுல் உள்ளது.
6)லக்னோ அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வி அடைந்து, நெட் ரன் ரேட் 0.667 பெற்று, 14 புள்ளிகள் பெற்று 6 வது இடத்தில் உள்ளது.
7) பெங்களுர் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வி அடைந்து, நெட் ரேட் 0.387 பெற்று, 12 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.
8)குஜராத் அணி 14 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி, 7 போட்டியில் தோற்று, 2 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. மைனஸ் 063 நெட் ரன்ரேட்டுடன் 12 புள்ளிகள் பெற்று 8 வது இடத்தில் உள்ளது.
9)பஞ்சாப் அணி மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி, 5 ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் அடைந்து, ரன்ரேட் 0.347 பெற்று, 9 வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 14 போடிகளில் விளையடி, 4 ல் வெறி பெற்று, 10 ல் தோல்வி அடைந்து, ரன் நேட் 0.318 பெற்று, 8 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில்,இந்த லீக் சுற்றில் கொல்கத்தா,ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய 3 அணிகளும் பிளேப் ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், சென்னை அணி இன்று ஆ.சி.பி அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதால்,இன்றைய போட்டியில், சென்னை ஜெயித்தாலோ அல்லது 18 ஓவருக்கும் மேட்சை முடிக்க வேண்டும் இல்லையென்றல் அதிக ரன்ரேட் பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்த நிலையில், பிளே ஆப் சுற்றுக்குப் பிறகு இறுதிப் போட்டி நடைபெறும்.வரும் மே 26 ஆம் தேதி ஐபிஎல் 17 வது சீசனின் இறுதிப் போட்டி
நடைபெறவுள்ளது.
இந்த சீசனின் எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது
SinojKiyan

