நாட்டின் 78 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, அரசும் மக்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி, மக்கள் தங்கள் டிபிகளை இந்தியாவின் தேசிய கொடியின் புகைப்படம் வைத்து, தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை எற்றும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, பொதுமக்கள் தேசியகொடியை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஆன்லைனில் தேசிய கொடியை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா போஸ்ட் இணையதளத்தில் இந்திய மூவர்ண கொடி ரூ.25க்கு கிடைக்கிறது. இக்கொடியை வாங்க இந்தியா போஸ்டில் பதிவு செய்ய வேண்டும். யுபிஐ அல்லது நெட்பேங்கில் மூலம், கொடியைத் தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

