
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்து செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இந்த விசாரணை இதில், கெஜ்ரிவாலின் பங்கு உறுதி செய்யப்பட்டது என அமலாக்கத்துறை கூறியது.
இந்த நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையில், நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு அடிப்படை உரிமை இல்லை; தேர்தல் பரப்புரைக்காக இதுவரை எந்த தலைவருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை எப்ன்று அமலாக்கத்துறை வாதிட்டது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி 2 நீதிபதிகள் ,கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும், ஜூன் 2 ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் மட்டும்தான் ஈடுபட அனுமதி வழங்கும் நிலையில் அவர் முதல்வர் அலுவல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
Editor by pavithra
