கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மா நிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள வயநாட்டில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2 வதாக மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நிலச்சரியில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதவது:
’’கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு வருத்தமடைகிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட, குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளர்.

