நடிகர் பிரசாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பிரசாந்த் பேட்டியளித்தார். அப்போது, தொகுப்பாளினியை பைக் பின்னால் அமர வைத்து, சென்னை தி நகர் சவுத் போக் சாலையை சுற்றி, சுற்றி வந்து பேட்டியளித்தார்.
ஆனால், பைக்கில் சென்ற இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. எனவே சென்னை போக்குவரத்து போலீஸார் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து, நடிகர் பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ’’கடந்த ஒரு வருடம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேஎன்.தமிழ் நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கியிருக்கிறேன். நாகர்கோவில், திருச்சி, மதுரையி கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன்.
இப்போது இந்த நிகழ்வு மூலம் எனக்கு இன்னொரு பிளாட்பார்ம் கிடைத்திருக்கிறது.
எல்லோரும் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்கள் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முக்கியம்’’என்று கூறினார்.

