கேரளம் மாநிலம் வயநாட்டில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக் 3 நாட்களுக்கு இலவச அழைப்புகளுக்கான சேவையை அறிவித்துள்ளது பிஎஸ் என்எல் நிறுவனம்.
கேரளம் மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்த்ய நிலையில், வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு, அண்டை மாநிலங்கள், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு பகுதியில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்களுக்கு இலவச அழைப்புகள் வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது.
அதேபோல் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அறிவித்துள்ளது.
அதன்படி, வயநாடு மாவட்டம் நிலம்பூர் தாலுகாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்குவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் அனுப்பிக் கொள்லாம். சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச மொபைல் இணைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது

