தமிழ்ப் புதல்வன் திட்டத் தொடக்க விழாவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ச்டாலின் மோடிவேசன் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால், பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.
தடைகள் என்பது உடைத்தெறியத்தான்! தடைகளைப் பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன்.
உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

