இந்த உலகம் பெரியது. அதில் அனைத்து உயிர்களும் வாழத் தேவையான அனைத்து அம்சங்களையும் இந்த இயற்கை வாரிவழங்கியுள்ளது.
அதில் மனிதன் என்பவன் தனித்துவமானவன். அவன் எண்ணம், செயல், இதெல்லாம் சமூகத்தில் மதிக்கப்படவேண்டுமானால் அது சமூக அக்கறை என்பதில் கலந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சமூக அக்கறை என்பது செயல்பாடாக வெளிச்சத்திற்கு வரும்போது அது மிகப்பெரிய அடையாளமாகவே உலகத்தோரால் பார்க்கப்படுகிறது.

பிரபலங்கள் செய்யும் சிறிய செயல் கூட வெளிச்சத்திற்கு வந்துவிடும்போது, ஆகப்பெரிய அற்புதங்களும் சாதனைகளும் , உதவிகளும் வெளியே தெரியத் தாமதமாகிறது. சில நேரங்களில் அது தெரியாமலும் போகிறது. அல்லது தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது.
அந்த வகையில், தன்னலமற்ற சமூகம் உருவாக வேண்டுமென்ற முனைப்பில், தியாக உள்ளத்தோடு, ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்காக உதவி செய்துவரும் ’’ஜீவ சாந்தி அறக்கட்டளை’’ தன் மனிதாபிமானமுள்ள செயல்களால் இவ்வுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
எல்லாரிடத்திலும் இறைவன் இருக்கிறான். ஆனால் இறைவனிடம் எல்லா மனிதர்களும் இல்லை என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினார்.
நமது உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார் என்று அன்னை தெரசா கூறினார்.
பிறர்க்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பீரான் கொய்ஸ் கூறினார்.
இங்கிலாந்தில் பிரசித்திபெற்ற முதுமொழி இரக்கம் அன்போடு இணைந்தது என்று.
அதுபோல் தங்கள் செயல்களில் இரத்தையும் அன்பையும் கலந்து இவ்வுலகிற்கு மனித நேயத்தால் பாலம் கட்டி வரும் ஜீவ சாந்தி டிரஸ்ட் கடந்து வந்த பாதைகள், பேரிடர்களிலும் ஆதரவற்றவர்களின் முகமாய் இருக்கும் அவர்களின் சேவையைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
இறக்கத்தான் பிறந்தோம் இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் என்ற கொள்கையை பிரதானமாய்க் கொண்டிருக்கும் ஜீவ சாந்தி அறக்கட்டளை கடந்த 2009 ஆம் ஆண்டு சலீம் என்பரால் தொடங்கப்பட்டது.
ஜீவசாந்தி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலமாக கோவை மற்றும் அதனைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் இறைப்பணியை 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என்ற மூன்று மதத்தின் அடிப்படையில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். பண வசதியின்றி அடக்கம் செய்ய முடியாதோர், அரசு மருத்துவமனையில் உயிரிழந்த ஆதரவற்றோர் என இதுவரை 12,000க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
அனைத்து மக்களும் சமத்துவத்தோடு, சமூக நல்லிணத்தோடு வாழ வேண்டும் நோக்கில், உறவின்றி மரிப்போருக்கும் உறவாக இருப்போம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பொதுமக்களிடம் இருந்த நன்கொடை பெற்று 10 ஆம்புலன்ஸ் மூலம் ஆதவற்ற மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
இதுவரை பல ஆயிரம் ஏழை, எளிய ஆதரவற்ற மக்களுக்கு உணவு, உடைகள் வழங்கி ஆதரவற்றோர் என்ற நிலையே இருக்க கூடாது என்ற நோக்கத்தோடு, அவர்களுக்குமருத்துவ உதவிகள், சிகிச்சை, உணவுகள் ஆகியவற்றை வழங்கிச் செயல்பட்டு வரும் ஒவ்வொரு செயலும் நம்மை ஆச்சயர்யத்தில் ஆழ்த்துகிறது.
இச்சேவைக்காக, தமிழ்நாடு அரசின் சிறந்த இளைஞருக்கான விருதை இந்நிறுவனத்தின் பொறுப்பாளரும், ஒருங்கிணைப்பாளருமான ஆசிக் பெற்றுள்ளார்.
மனிதம் என்பது மரித்துப் போகாது என்பதையே இது காட்டுகிறது.
கோவையைத் தலைமையிடமாய்க் கொண்டு செயல்பட்டு வரும் ஜீவ சாந்தி அறக்கட்டளை, விபத்தில் காயமடைந்தவர், வயது முதிர்வால் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், சரியான சிகிச்சை இல்லாமல் காயங்களில் புழுக்கள் இருப்பதுகூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், ஹெச்.ஐ.வி எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு, நிவாரண உதவி தேவைப்படும் இடங்களுக்கு எல்லாம் காற்றுப் போல கடவுளின் கரங்கள் போல ஜீவ சாந்தி அறக்கட்டளை தோழர்கள், நிர்வாகிகள் உரிய நேரத்தில் அங்கு சென்று ஆதவற்று நிற்கும் மக்களுக்கு தோள் கொடுத்து, வேண்டிய உதவிகள் செய்து அவர்களின் உற்ற நண்பராய் இருக்கின்றனர்.
உறவின்றி மரிப்போர்க்கு உறவாய் இருப்போம் என்ற இலட்சிய முழக்கத்தோடு பயணித்து வரும் ஜீவ சாந்தி அறக்கட்டளையிம் சேவை என்பது மண்ணுலகமே போற்றும் மகத்தானது.
தெருவோரத்தில் நிராதரவாய் படுத்துக் கிடப்போரைத் தேடிச் சென்று அவர்களின் பசியாற்றும் குணத்திற்கு ஈடு ஏது?
இம்மனித சேவைக்காகத்தான் ஜீவ சாந்தி டிரஸ்டின் நிறுவனர் சலீமுக்கு கெலரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த2014 ஆம் ஆண்டு ஜீவ சாந்தி டிரஸ்ட் சார்பில் அனாதைகள் இல்லாத உலகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இவர்களில் சேவையை பாராட்டி, பல முன்னணி நாளிதழ்களில் இவர்களைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
மக்களிடத்திலும் இவர்களின் செயலுக்கு ஆதரவும் வரவேற்பும் எப்போதும் உள்ளது.
இதுதவிர அடுத்த தலைமுறையினருக்கும் இந்த சேவையும் நல்லொழுக்க விழுமியங்களும் கடத்தப்பட வேண்டுமென்ற நோக்கில் ஜீவ சாந்தி தோழமைகள் மது ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த உலகில் ஏன் ஆதரவற்றோர் நிலை உருவாகிறது என்பது பற்றி ஜீவ சாந்தி டிரஸ்ட் தெரிவித்துள்ளதாவது:
ஆதரவற்றோர்கள் சமூகம் உருவாவதற்கான காரணம் பெரும்பாலும் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதாலோ அல்லது அவர்களை காப்பகங்களில் சேர்த்துவிடுவதாலே மட்டுமே உருகிறது என்ற கருத்தே பெரும்பாலான மக்களின் மத்தியிலே நிலவிவருகிறது ஆனால் இதுவும் ஒரு காரணம் மட்டுமே என்ற அளவில் கூர்ந்து பார்ப்பது தான் ஆரோக்கியமானது.
அன்பில்_ஏற்பட்ட_குறைபாடினால், கூட்டுக்குடும்பம் தனிகுடும்பமாகி தனிக்குடும்பம் தனித்தீவு ஆனதின் விளைவாக, இன்றைய சூழலில் பெரும்பாலும் ஏழை_பணக்காரன்,படித்தவன்_பாமரன், மேல்சாதி_கீழ்சாதி, குழந்தைகள் _முதியவர்கள்,ஆண்_பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒரு உளவியல்_ரீதியான மன அழுத்தங்களினானால் பாதிக்கப்ட்டநிலையில் ஏற்படும் எதிர்விளைவுகளான, கோபம் _பொறாமை _பயம் _கஞ்சத்தனம் கோழைத்தனம்_போதை_தனிமை_கவலை, சுயநலம் _ கீழ்படியாமை_ விட்டுகொடுத்தல் போன்ற காரணங்களினால் மனம் சிதைவடைந்தே பெரும்பால மக்கள் காணப்படுகிறார்கள் இதன் விளைவாக மெத்த படித்த உயர்பதவியில் இருப்போரில் இருந்து __ஐடிதுறையிலிருந்து_கல்லூரி_மாணவர்கள் வரை அன்றாடம் நூற்றுக்கணக்கானவர்கள் வாழ்கையில் ஏற்படும் வெற்றி,தோல்விகளையும், சந்தோசங்களையும்,துன்பங்களையும் சமநிலையில் எடுத்துக் கொள்ள தெரியாமல் #தற்கொலை செய்து கொள்வதினாலும்,போதையினால் ஏற்படும் விபத்துகளினாலும்,ஆசை பேராசையாவதினால் நடத்தப்படும் கொலைகளினாலும்,அன்பு வெறியாக மாறிய காதல்களினாலுமே குடும்பங்களும் பெற்றோர்களும்,உறவினர்களும் தனிமையாக்கப்படுகிறார்கள்.
இந்த_மனித_சமூகம்_ஆதரவற்ற_சமூகமாக
மாறிவருதற்கு_நாமும்_நேரிடையாகவோ
மறைமுகமாகவோ_காரணமாகிறோம்
எதிர்பார்ப்பு_இல்லாத_அன்பை_கொண்டு
ஆதரவற்றோர்கள்_இல்லாத_உலகம்
படைப்போம்…!!!!! ”என்று தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்டோருக்கும், தென்மாவட்டங்களில் ஏற்ற கனமழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்துள்ளனர்.
அதேபோல் கேரள மாநில வயநாட்டில் அதீத கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களே உருதெரியாமல் அழிந்துபோய், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு களத்திற்கே சென்று உதவி செய்துள்ளனர் ஜீவ சமாதி டிரஸ்ட் தோழர்கள்.
அவர்களின் செயலுக்கு பாராட்டுகள் கூறிக் கொண்டு, மேலும் அவர்கள் செயல்கள் தொடர வாழ்த்துவோம்.
சினோஜ் கியான்

