சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் சிராஜ்(35). இவர் தனுஷின் தீவிர ரசிகர்கள் ஆவார். இவர் பணிக்குச் செல்லாமல் இருந்ததால், இவரது மனைவி தனது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இவரைவிட்டு பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிராஜ் தனது நண்பர்களுடன் மகாலட்சுமி திரையரங்கில், தனுஷின் ராயன் படத்தைப் பார்க்கச்சென்றுள்ளார்.
அப்போது, குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்பகையால் ஆத்திரத்தில் இருந்த சிராஜ் நண்பர்கள் நேற்று(13-08-24) மாலை குடிபோதையில் இருந்தபோது, சிராஜை தாக்கி, அவரது முன் பற்களை உடைத்து, அவரது ஆணுறுப்பை அறுத்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

