Last updated on May 22nd, 2024 at 05:01 am

கோடை காலத்தில் உயர்ந்த காய்கறி விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கோடை காலத்தில் வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், கோடை காலத்தில் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது.
கோவையில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறி, பழங்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வெயில் காரணமாக உற்பத்தி குறைவு, நீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரித்துள்ளது.
கடந்த மாத, இந்த மாத விலை இஞ்சி -ரூ.120, ரூ.140 வெண்டை ரூ 30, ரூ 70 பீன்ஸ் ரூ.75 -ரூ. 150 க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.
மேலும், சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் கோடை வெயிலால காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளதாகவும், வழக்கமாகச் சந்தைக்கு 700 முதல் 800 காய்கறி வண்டிகள் வந்து செல்லும் நிலையில், 300 வண்டிகளே வந்து செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

