Last updated on May 21st, 2024 at 09:59 am

சென்னையில் வாரத் தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து உச்சம் பெற்றுள்ளது.
மே மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் மே 18 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.
இந்த நிலையில், வாரத் தொடக்கமான இன்று திங்கட்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று மே 20 ஆம் தேதி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6900க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 கிராம் தங்கம் விலை கிராமிற்கு ரூ.41 உயர்ந்து, ஒரு கிராம் 5652க்கும் சவரனுக்கு ரூ.38 உயர்ந்து, ரூ.45216 க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.3.50 ஆக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை ஆகிறது.
வாரத் தொடக்கத்திலேயே புதிய உச்சத்தை தங்கம் அடைந்துள்ள நிலையில்,வெள்ளியும் வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.

