
18 வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களிலும்,இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் ராகுல்காந்தி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தி வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள்
ராகுல் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக தனிப்பெரும்பான்மை இழக்கும் சூழல் உள்ளதால் ராகுல்காந்தி ஆலோசனை செய்யவுள்ளனர்.
PAVITHRA

