புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் #MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
’’நமது DravidianModel அரசு அமைந்த பிறகு,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS),
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund),
சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள்,
தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024,
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023
உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் #MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS)- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Previous Articleபுதிய குற்றவியல் சட்டங்கள் வரும் 1 ஆம் தேதி முதல் அமல்!
Next Article புகைப்பிடிப்பதால் அரிய வகை நோய்….
Related Posts
Add A Comment

