பல்லடம் அருகே பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்து-2 பேர் படுகாயம்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது காலபட்டியை சேர்ந்த ஸ்ரீ வர்த்தினி என்பவர் புதுக்கோட்டையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் இவர் தனது குடும்பத்தோடு காரி சென்று கொண்டிருந்தபோது பேருந்தை ஒன்று முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது காரானது பேருந்தினை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பக்கவாட்டில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பல்லடம் காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்த ஸ்ரீ வர்த்தினியின் குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

