கரூர் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பசுபதிபாளையம் ராமானூர் நண்பர்கள் நடத்தும் எட்டாம் ஆண்டு இரட்டை சாதா புறா போட்டி இன்று தொடங்கியது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் ராமானூர் நண்பர்கள் நடத்தும் எட்டாம் ஆண்டு இரட்டை சாதா புறா போட்டிஅமராவதி ஆற்றங்கரையில் இன்று துவங்கியதுஇந்த போட்டியினை முன்னாள் மாமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.
இதில் பத்துக்கு மேற்பட்ட சாதா புறாக்கள் பங்கேற்றன இந்த சாதா புறா போட்டி இன்று துவங்கி தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சாதா புறாகண்கள் மஞ்சள் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் மேலும் இந்த புறா நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் பறக்க வேண்டும் புறா உட்காரும் இடத்தில் நான்கு இறக்கை வெட்டு புறா இருக்க வேண்டும்.
மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை புறாவை காட்டப்பட வேண்டும் என்ற விதிமுறைகளோடு இந்த போட்டி துவங்கியது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்ண புறா போட்டி நடைபெற உள்ளது இந்த இரண்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது

