தமிழ் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் இந்த கல்வி ஆண்டின் வளர்ச்சி நாளில் தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் தொடஙீ வைக்கப்படுகிறது. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கிவைக்கவுள்லார்.
தமிழ் நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் 15.9.22 அன்று தொடங்கி வைக்கப்பட்டு 1545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற்றனர்.
கடந்த ஆண்டு 25.8.23 அன்று கலைஞர் பிறந்த நாளில் திருக்குவளையில் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுல் 30,992 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18,50,000 க்குழந்தைகள் காலை உணவை உணடு மகிழ்ச்சியுடன் பள்ளியில் பாடங்கள் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனவே, வரும் 15.07.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ் நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கிறார்கள். இத்திட்டம் மூலம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளியில் பயிலும் இலட்சத்துகு 23 ஆயிரம் 536 குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

