தூத்துக்குடி திமுக மாநகராட்சி பெண் கவுன்சிலரான ரெக்ஸ்லின் என்பவர் துணையுடன் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழியில் இறங்கி போராட்டம் நடத்திய ஜெர்மன் என்ற பெண் மீது திமுக கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் கொடூரமான தாக்குதல் நடைபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு திமுக பெண் கவுன்சிலர் உள்ளிட்ட தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 4வது தெரு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் இவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் இரண்டு சென்ட் இடம் உள்ளது இதற்குரிய வீட்டுத்தீர்வு மற்றும் கரண்ட் பில் ஆகியவை சகாயராஜின் பெயரில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சகாயராஜ் இறந்துவிட அந்த வீட்டில் அவரது மனைவி ஜெர்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இதன் அருகே சகாயராஜிற்கு சொந்தமான வீட்டில் அவரின் தங்கை பிரீண்டா என்பவர் வசித்து வருகிறார்
இந்நிலையில் பிரீண்டா அந்த இடத்தை தனக்கு சொந்தமான இடம் எனக் கூறி அபகரிக்க முயன்ற நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வழக்கு சகாயராஜிற்கு சாதகமாக முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிரீண்டா மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்பிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பிரீண்டா வசிக்கும் வீட்டு தீர்வை எதுவும் இல்லாத நிலையில் நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் ரெக்சிலின் ஏற்பாட்டின் பேரில் முறைகேடாக எவ்வித அனுமதியும்யின்றி பிரீண்டா வசிக்கும் வீட்டிற்கு குடிநீர் பைப் அமைக்க குழி தோன்டியுள்ளனர்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெர்மன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நிலுவையில் இருக்கிறது அந்த வீட்டிற்கு தீர்வை எதுவும் கிடையாது எவ்வாறு குடிநீர் பைப் லைன் கொடுக்கிறீர்கள் என்று கூறியபடி பைப்லைன் அமைக்க தோண்டிய குழியில் இறங்கி பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
தொடர்ந்து அங்கே நின்று கொண்டிருந்த திமுக பெண் கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் குழியில் இறங்கி போராடிக் கொண்டிருந்த ஜெர்மனியை பிரீண்டா தாக்கி தலை முடியை பிடித்து அடித்து வெளியே இழுத்து போட முயன்றுள்ளார். இந்த சம்பவத்தை அப்போது அங்கே நின்று செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்த சிலரை அடிக்கும் தோணியில் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தபடி திமுக பெண் கவுன்சிலர் ரெக்ஸ்லின் மிரட்டியுள்ளார்
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஆகி வருகிறது
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஜெர்மன் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஜெர்மன் மகள் ஷர்லி கூறுகையில் திமுக பெண் கவுன்சிலர் ரெக்சிலின் அராஜகத்தில் ஈடுபட்டு முறைகேடாக பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்தவித ஆவணமும் இல்லாத நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளார் மேலும் தனது தாய் ஜெர்மன்னை திமுக கவுன்சிலர் ரெக்சிலின் தூண்டுதலின் பேரில் பிரீண்டா மற்றும் சிலர் தாக்கியுள்ளனர்.
எனவே திமுக பெண் கவுன்சிலர் ரெக்ஸ்லின் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக கவுன்சிலரின் இந்த அராஜகத்திற்கு மாநகராட்சி ஆணையர், மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடியில் முறைகேடாக பணத்தைப் பெற்றுக் கொண்டு திமுக பெண் கவுன்சிலர் பெண்ணை தாக்கி குடிநீர் இணைப்பு போட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

