கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவைச் சேர்ந்தவர் ஜோமைசி கலிசியா,33, இவர் தன் மனைவி உட்பட 42பெண்களை கொடூரமாக கொன்று புதைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள குவாரி ஒன்றில் உள்ள குப்பை கிடங்கில் இருந்துதொடர்ந்து சடங்கல் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்கையில் 10 செல்போன்கள், லேப்டாப், அடையாள அட்டைகள், மற்றும் பெண்களின் ஆடைகள், கொலைசெய்யப்ப பயன்படுத்திய கத்திகள், உடல்களை அங்கிருந்து கொண்டு செல்ல உதவிய 9 சாக்குகள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தனது மனைவி உட்படமொத்தம் 42 பெண்களைகொன்று அவர்களின் உடல்களை குவாரியில் வீசியதாக செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் ஏன் இப்படி கொடூரமாய் பெண்களை கொன்றார்? என போலீஸார் தீவிர அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

