6.38 லட்சம் லஞ்ச பணத்தை காரில் எடுத்து சென்ற சார் பதிவாளரை மடக்கி பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்மபுரியை சேர்ந்த சாய் கீதா (58) என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் நிலங்களை பத்திரப்பதிவு செய்த பின்னர் புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக பணம் பெறுவதும் அந்த பணத்தை இரவு நேரத்தில் அவரது வாகனத்தில் எடுத்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இது குறித்தும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது.
அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நிலங்களை பத்திரப்பதிவு செய்த பின்னர் புரோக்கர்கள் மூலம் சார் பதிவாளர் கீதாவிடம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் நேற்றிரவு தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மூலம் கிடைத்த லஞ்ச பணம் 6 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தை சார்பதிவாளர் சாய் கீதா பெற்று கொண்டு தனது காரில் சென்றுள்ளார்.
தொடர்ந்து இதனை கண்காணித்து வந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரை பின்தொடர்ந்து சென்று கெலமங்கலம் பகுதியில் அவரை கையும் களவுமாக பிடித்து காரில் இருந்த 6 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இதுகுறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

