திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக ஆடி காற்றின் வேகம் கடந்த இரு தினங்களாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பலத்த காற்று வீசிய காரணத்தினால் மின் இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டது
இதற்கிடையே இன்று மாலை வீசத் தொடங்கிய காற்றின் வேகம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென அதிகரித்த காரணத்தினால் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்
அதேபோல நகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் காற்றில் கிழிந்து தொங்கியது.
திண்டுக்கல் பழனி சாலையில் மைய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெயர் பலகை அடியோடு முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.
அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
நேற்று மாலை தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சூறை காற்றினால் நகரின் சாலைகளில் குப்பை குவியல்கள் சிதறி கிடக்கின்றது.

