எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுட்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தமிழ் நாடு அரசு மின் கட்டண உயர்வை அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதிமுகவினர் மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் குறித்து தமிழ் நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.,
இதுகுறித்து அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி உதய மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் ம்னின் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் எடப்பாடி பழனிசாமி. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் அதிமுகவின் செயல்பாடு உள்ளது.

