மத்திய பாஜக அரசு நேற்று பாராளுமன்றத்தில் 2024-2025 ஆம் அண்டிற்காக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்டபல மாநிலங்களுக்குஎந்த திட்டங்களும் அறிவிக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
கையில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

