நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஒரு விமானம் புறப்பட்ட சிலை நிமிடங்களில் விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நமது அண்டை நாடான நேபாளத்தின் தலை நகரன காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலாத்தளமான போகராவுக்கு புறப்பட்ட விமானத்தில் 19 நபர்கள் இருந்ததாக தகவல்வெளியாகிறது.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில் சர்வுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் மற்றும் 2 விமானிகள் இருந்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில வி நாடிகளில் ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது.
விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த 18 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்திற்குள்ளான இந்த விமானம் செளர்யா ஏர்லைஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். விபத்து ஏற்பட்ட உடன் விமானத்தின் தீப் பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்களும், தீயணைப்புப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் விமான விபத்து அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அ ஜனவரியில் , எட்டி ஏர்லைன்ஸ் விமானம் போக்காரா விமான நிலையட்தில் தரையிறங்கும்போது, ஏற்பட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினோஜ்கியான்

