தமிழ் சினிமாவின் முன்னணினடிகர் சூர்யா. இவரது 49வதுபிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளையொட்டி, நள்ளிரவு 12.12 மணிக்கு சூர்யா 44 படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது.
இதில், சூர்யா சிகரெட் புகைக்கும் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.
உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா?
உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா?
உங்கள் நடிப்பை நம்பாமல் எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா’’ என்று தெரிவித்துள்ளார்.

