கோவை பொருத்தவரை எதிர்பார்த்த அளவில் இல்லாவிட்டாலும் பொதுவாக அனைத்து துறைகளிலும் திருப்திகரமாக உள்ளதாக சிஐஐ கோவை தலைவர் தெரிவித்தார்.
கோவை சங்கத்தில் உள்ள சிஐஐ அலுவலகத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் பட்ஜெட் குறித்து செய்தியாளர் சந்தித்து நடைபெற்றது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை சிஐஐ தலைவர் ராதாகிருஷ்ணன்:-
இந்த பட்ஜெட்டில் அனைத்து துறைகளிலும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார் அது மிகவும் வரவேற்புதக்கது.கோவை மாவட்டத்தை பொருத்தவரை இரும்பு இறக்குமதிக்கு பூஜ்ஜியம் சதவீதமும்,செம்புவிற்கு சதவீதம் குறைத்துள்ளது மேலும் வாருங்கள் இரும்பு, செம்பு விலைகள் குறையும் எனவும் தங்கம் விலை குறையும் என தெரிவித்தார்.
சிறுகுறு தொழிலாளர்களுக்கு கடன் வாங்குவதில் சிக்கல் இல்லை எனவும் மத்திய அரசு அறிவித்த நிதியில் இருந்து இனிமேல் வங்கிகளில் நேரடியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் உள்கட்டமைப்பிற்கு 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது அனைத்து தொழில் துறையினர் மற்றும் பொது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனக் கூறினார்.
பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்துள்ளனர் எனவும் பத்திரப்பதிவு கட்டணங்கள் குறைந்துள்ளது எனவும் இதனால் பொதுமக்கள் பயனடைவார்கள்.
மேலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கியதில் தொழில்துறைக்கு நல்ல பயனளிக்கும் என்றும் முத்ரா திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் உயர்த்திள்ளனர். இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளிகளுக்கு பெருமளவில் உதவிகரமாக இருக்கும் என கூறினர்.
கோவை மாவட்டத்திற்கு ஏற்றது போல பட்ஜெட் இல்லை என்றும் ஆந்திராவில் உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு செய்தால் அனைத்து தொழில்துறையினருக்கும் உதவிகரமாகவும் இருக்கும் என கூறினார்.

