பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்றி, பின்னர் தன்னுரை நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஒட்டுனராகப் பணியாற்றி வந்தார். நேற்று பள்ளி வாகனம் ஓட்டும்போது, மாரடைப்பு ஏற்பட்ட சூழலில், பேருந்தை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுனர் மலையப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் சிரமத்துடன் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் மயங்கி சரிந்தார் மலையப்பன். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்றி, பின்னர் தன்னுரை நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

