33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில், 206 நாடுகளைச் சேர்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறும் சீன் நதிக்கரையில் குவியத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 45 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய நேரப்படி, இரவு 11 மணியளவில் சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில், 206 நாடுகளைச் சேர்ந்த் 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த அணிவகுப்பின்போது, இந்தியா சார்பில், டேபிள் டென்னிஸ் வீரர் சடத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரார்ங்கனை பி.வி.சிந்து, கொடியை ஏந்திச் சென்றனர்.
இதையடுத்து, தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கரேரோ என்ற இடத்தில் தொடங்கின. இதில் பாப் பாடகி லேடி காகா மேடையில் ட் பாடலை பாடினார்.
கடந்த 1896 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் நவீன விளையாட்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sinojkiyan

