31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜூலை 29 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று முதல் 31 ஆம் தேதி வ்ரை 3 நாட்கள் சென்னையில் உள்ள டிஜிபி வளாகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்கள் சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படில், இன்று சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலை நகரங்களில் ஆசிரியர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சிலர் தொடக்கப்பள்ளிகளை மூட வேண்டிய நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தும் வீட்டிற்குத் திரும்பினர்.
இந்த நிலையில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
