ஆகஸ்ட் மாதம் பல படங்கள் தியேட்டரில் ரிலீஸாக உள்ளன. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலான், அந்தகன், டிமாண்டி காலனி 2, ரகு தத்தா ஆகிய படங்கள் வெளிவருகிறது.
இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக உருவாகியுள்ள கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது இதன் டிரெயிலர் வெளியாகியுள்ளது.
போலீஸ் டிரெயினிங்கில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்திதெரியாமல் படாத பாடுபடுகிறார். தனக்கு புரமோசன் வேணும் ம் என்பதற்காக, இந்தியைக் கற்றுக் கொள்ள பல தந்திரங்களை உபயோக்கிறார்.
அவருடன் வரும் தேவதர்ஷினியும் கலாட்டா செய்கிறார். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தாலும் காமெடியாக டிரெயிலர் உள்ளது.
இதனால் இப்படம் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக போட்டி போடும் என தெரிகிறது. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

