பட்டியலின பழங்குடியினத்தவருக்கு உள்ஓதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுளது.
உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு கூறினர். 7 நீதிபதிகளில் பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட கருத்தை கூறினார்.
தமிழ் நாட்டில் பட்டியலினத்தவர்களில் அருதந்தியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
பட்டியலினத்தவருக்குள் மிகவும் பின் தங்கிய அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீட் வழங்க மு.க.ஸ்டாலின் அப்போது முன்மொழிந்திருந்தார்.
பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் படியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம்; உள் ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவை மீறவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
அருந்ததியினருக்கு 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வழங்கிய 3% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு உச்ச நிதிமன்ற அமர்வு அனுமதியளித்துள்ளது.
தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு தெரிவித்துள்ளது.
Sinojkiyan

