இந்திய வீராங்கனை மனு பாகர், துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் அவர் வெண்கலம் வென்றார்.
இதையடுத்து, மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் நூலிழையில் பதக்க வாய்ப்பை தறவிட்டார்.
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரில் விளம்பர ஒப்பந்தக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்ந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றதன் மூலம் 2-3 நாட்களில் 40 பிராண்ட்ஸ் தங்களை அணுகியது. அதில் ரூ.1.5 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளது என்று நீரவ் டோமர் தெரிவித்துள்ளார்.

