கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். தொடர்து நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிகவும் மோசமான பேரிடம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சர்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும். இதுபோன்ற மோசமான நிலையை கேரளா இதுவரை கண்டதில்லை. டெல்லியிலும், இங்கு முதலமைச்சரிடமும் கேள்வி எழுப்புவேன் என்று கூறினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வயநாடு சென்றது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
’’வயநாடு நிலச்சரிவு பாதிப்பை ராகுல்காந்தியும் பிரியங்கா கந்தியும் ஓடிவந்து பார்ப்பது மகிழ்ச்சிதான். அவர்கள் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிதி அறிவிக்கிறார்கள், ஓடி வந்து பார்க்கிறார்கள், அதே தூத்துக்குடி பெரும் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோது, ஒருத்தர் கூட வந்து பார்க்காதது ஏன்? ’’என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

