தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசியதாவது:
படத்தில் நடித்த நடிகர்கள், பணியாறிய கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி கூறினார். பின்னர், எனக்கு நடிப்பின் மீது பெரிய ஆர்வம், சிறிதோ, பெரிதோ எதோ ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு விபத்தில் சிக்கி என் கால் உடைந்தது.
அதன்பின்னர், 3 ஆண்டுகள் என் வாழ்க்கையை மருத்துவமனையில் கடத்தினேன். 23 அறுவைச் சிகிச்சைகள் நடந்தது. மருத்துவர்கள் என்னால் நடக்கவே முடியாது என்றனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, கனவும் லட்சியமும் இருந்தது. இப்போராட்டத்தில் 10 ஆண்டுகள் போனது. அன்று நான் விட்டு இருந்தால் இன்று உங்கள் முன் பேசியிருக்க முடியாது.
சினிமாவில் வெற்றி பெறாமல் இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்டால், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்று கூறினர்.

