இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2000ஆண்டு வரலாறு கொண்டது. தவறு செய்தது மன்னனே ஆனாலும் மன்னனை கண்னகி கேள்வி கேட்ட மண் இது.
நீதியைக் காக்க தன் உயிரை தந்தை மன்னர் ஆட்சி செய்த மண் எனப் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல எல்லோருமே போற்றலாம்.
இன்று முகால் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக மதுரை நகரத்தின் மரபையும், பாண்பாட்டையும் கொண்டாடும் மா மதுரை விழா வினை தொடக்கி வைத்து முதல்வர் ஆற்றிய உரையில்,
’’இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை, இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலை நகராக ஆட்சி செய்த நகரம். ஆரியப்படை கடந்த தலை நெடுஞ்செழியன் ஆட்சி செய்த நகரம். தவறு செய்தவன் மன்னனே ஆனாலும், மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.
நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்தை மன்னர் ஆட்சி செய்த இடம் இது. திருமலை நாயக்கரும் ராணி மங்கம்மாலும் ஆண்ட பூமி இது. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது.
புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெறுகிறது,. 1866 ஆம் ஆடே நகராட்சி ஆன ஊர் இது. சென்னைக்கு அடுத்து, 1971 ஆம் ஆண்டு மதுரையைத்தான் மா நகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக் கொண்ட இடமும் இந்த மதுரைதான்.
ஏன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில்தான்…வரலாற்றைப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மதுரையின் பெருமையைப் பறைசாற்றிய முதல்வர் !
Previous Article3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஐகோர்டில் வழக்கு
Related Posts
Add A Comment

