தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சயு சினிமா சம்பந்தமான படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு, விரைவில் சினிமாவில் இயக்குனராக உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, லைகா தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி அல்லது சூரி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
காமெடி நடிகராக இருந்த சூரி தற்போது ஹீரோவாகிவிட்டதால் ஜேசன் சஞ்சயின் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

