சென்னையில் வீடு முன்பு அனுமதியின்றி’ நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல வீடுகளின் கேட்டுகளில் ’நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பர நிறுவனங்கள் வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு, அதில் தங்கள் நிறுவன விளம்பரத்தையும் வைத்துவிடுகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்கும்படி, உயர் நீதிமன்ற, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

