கொட்டுக்காளி. படத்தைப் பார்த்த இயக்குனர் லெனின் பாரதி பாராட்டியுள்ளார்.
இயக்குனர் வினோத் ராஜ் பி.எஸ். இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் முன்னணி கேரக்டரிகளில் நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போட்டருடன் இணைந்து கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம்தேதி படக்குழு வெளியிட்டது.
இப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குனர் லெனின் பாரதி பாராட்டியுள்ளார்.
இப்படம் பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:
கொட்டுக்காளி குடும்பம் சாதி ,மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம, கயமைகளின் பெரும் பயணம். பி.எஸ். வினோத் ராஜ்ஜுக்கு முத்தங்கள்,. இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், நடித்த சுரி மற்ற்ம் முழுவினருக்கு கோடி நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

