கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இரான் நாட்டு புதிய அதிபர் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த ஹமாஸ் தலைவர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதற்கு இஸ்ரேல் தான் காரணம் எனக் கூறி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்தது.
இதுகுறித்து. அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில், இன்று கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் ராணும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 100 பேர் பலியாகினர்.
50க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பள்ளியில் மக்கள் தங்க வைக்கப்படுள்ளதை அறிந்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

