’’பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’ என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
’’பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள இந்திய ஆடவர் ஹாக்கி வீரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும், ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ள இந்திய வீரர் அமன் ஷெராவத் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு வெள்ளிப்பதக்கத்தையும், ஐந்து வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

