பங்குச் சந்தையில் முதலீடு செய்யாவிட்டாலும் சாமானியர்களின் சேமிப்பு பணத்திற்கும் ஆபத்து என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சியில் பணம் போட்டவர்கள் வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள், மாதம்தோறும் பிஎ.ஃப் பணம் கட்டுபவர்க, காப்பீடு சந்தா செலுத்துபவர்கள் என எல்லோரின் பணமும் பங்குச் சந்தையில்தான் இருக்கிறது.
இந்திய மக்களின் பணம் 5 லட்சம் கோடி டாலர்கள் பங்குச் சந்தையில் இருக்கும்போது, நான் பங்குச் சந்தையில் எந்த முதலீடும் செய்யவில்லை. அதனால் செபியில் என்ன நடந்தாலும் எனக்குக் கவலை இல்லை என இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

