தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் தி கோட். இப்படத்தில் விஜயுடன் இணைந்து,லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் போஸ்டர்கள், 3 சிங்கிகள் வெளியாகி நல்ல கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, உங்களுக்கான அசத்தலான டிரெய்லர் உருவாக்கி உள்ளோம். 2 நாட்கள் பொறுமையாக இருங்கள் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

