மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்குவங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் சம்பவ தினத்தில் பணிக்காக வந்திருந்தார். அடுத்த நாள் காலை மருத்துவமனை வளாகத்தில், உள்ள கருத்தரங்க அறையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதன்பின், அவரது உடல் மீட்டக்கப்பட்டு, உடல் கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையின் அடைப்படையில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பயிற்சி மருத்துவரின் இடுப்பு, உதடு,விரல்கள், இடது கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, அவர் கத்தி கூச்சல் எழுப்பாமல் இருப்பதற்காக மாணவியின் கழுத்து, நெறிக்கப்பட்டதால், தொண்டைப்பகுதியில் சுற்றியுள்ள மூச்சுக்குழாய் தைராய்டு குருத்து எலும்பு முறிந்து, பிறப்புறுப்பில், ஆழமான காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக, கல்லூரி மருத்துவமனை முதல்வரை பதவியில் இருந்து விலக அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

