Last updated on May 22nd, 2024 at 05:01 am

கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுக்கு சங்கர் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள், பெண் போலீஸார் பற்றி அவதூறான கருத்துகள் கூறியதாக புகார் எழுந்தது.
இதுபற்ரி கோவை பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து,தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரம் போலீஸார்கடந்த 4 ஆம் தேதி கைதுசெய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பழனிசெட்டிப்பட்டியில், சவுக்கு சங்கரை கைது செய்யும்போது அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸார் 2 வது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அதன்பின்னர், சேலம்,திருச்சி, போலீஸார் சார்பிலும் அவர் மீது அடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஏற்கனவே சென்னை சைபர் கிரைம் போலீஸார் ஏற்கனவே அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்த நிலையில், அந்த வழக்கில் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்குகள் தொடர்பான சவுக்கு சங்கர் கடந்த 10 ஆம் தேதி கோவையில் இருந்து சென்னை அழைத்துச் செல்லப்பட்டு, தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் வைத்து, திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
முன் ஜாமீன் கோரி பெலிஸ்க் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க முடியாது என மறுத்தது.
அநாகரீகமான விவாதம் செய்த பெலிக்ஸை இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும்ன் என உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தெரிவித்திருந்தார்.
பெலிக்ஸின் முன் ஜாமீன் மனு விசாரணையை ஒருவாரம் காலம் நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.
எனவே யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
வேன் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்த நிலையில், சவுக்குசங்கர் மீது தரமணி சப் இன்ஸ்பெக்டர் வனிதா கொடுத்த புகாரின் பேரிலும், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் பற்ரி தவறான தகவல்கல் வெளியிட்டதற்காக, சிஎம்டிஏ சார்பில், கொடுக்கப்பட்ட புகார் அடுத்து, மேலும், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்தும், கடந்த 9 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதையடுத்து, சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இதனிடையே சவுக்கு சங்கர் இன்று மருத்துவ பரிசோதனைக்கா கோவை சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறிச் சென்றார்.
போலீஸார் முன்னிலையில், அவர் இவ்வாறு மீடியாக்களிடம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SinojKiyan

