Last updated on May 22nd, 2024 at 05:03 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிவித்த நிலையில், அதற்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தார் விஜய்.
எனவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் பத்திரிக்கைகளில் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் நிர்வாகிகள் பெயர் அடங்கிய பொது நோட்டீஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமைக் கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளர் தகிரா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
Edited by pavithra

