தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவி செய்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இக்கட்சி சார்பில் மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். இக்கட்சியில் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, கட்சியில் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழும், பரிசும், ஊக்கத் தொகையும் வழங்கினார்.
அதேபோல் இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், விரைவில் மாணவர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்.
அதன்படி, இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் விருது வழங்கும் நடைபெற்றுவருகிறது. இதில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று , மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் விழாவில் பேசி வருகிறார்.

