சென்னையில் பகுஜன சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்குக் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி, புதிதாக அருண் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
புதிதாக பொறுப்பேற்ற சென்னை காவல் ஆணையர் அருண், காவல்துணை ஆணையர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பணியில் சுணக்கம் காட்டும் போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை , பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது என சென்னை காவல் ஆணைய அருண் எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்ரி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீஸாரின் ரோந்துப் பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

