Last updated on July 12th, 2024 at 01:52 pm
சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திமுகவின் எம்.எல்.ஏவின் மறைவை அடுத்து, விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆ தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இதற்கான பிரசாரம் முடிந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.
இத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது தமிழ் நாடு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றி அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

